அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக கொந்தளிக்கும் சிறுமி : பரவும் வீடியோ காட்சி
அமெரிக்காவில் தொடர்ந்து நிலவி வரும் துப்பாக்கிச் சூட்டு வன்முறைக் கொலைகளுக்கு எதிராக 6 வயதுச் சிறுமி ஒருத்தி கண்ணீருடன் பேசும் காணொளியொன்று காண்போர் மனதை உருக்கி வருகிறது.
அமெரிக்காவில் தொடர்ந்து நிலவி வரும் துப்பாக்கிச் சூட்டு வன்முறைக் கொலைகளுக்கு எதிராக, 6 வயதுச் சிறுமி ஒருத்தி கண்ணீருடன் பேசும் காணொளியொன்று, காண்போர் மனதை உருக்கி வருகிறது. "கெல்ஸி" எனும் இந்த 6 வயதுச் சிறுமி அமெரிக்காவின் பால்ட்டிமோரில் வசிக்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் 2017 ஆண்டில் அதிக அளவில் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை இங்கு தான் அதிகம். அதை அறிந்த அதிர்ச்சியில் தான் சிறுமி இப்படியோர் காணொளியைத் தமது தாயாரின் உதவியுடன் பதிவு செய்து டுவிட்டரில் வெளியிடச் செய்துள்ளார்.