வர்த்தக போர் முனைப்பில் அமெரிக்கா சீனா
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 4 புள்ளி 3 லட்ச ரூபாய் மதிப்பிலான அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது. முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், தற்போது 10 சதவீதமாக உள்ள 14 புள்ளி 5 லட்சம் கோடி மதிப்பிலான சீன பொருட்களின் இறக்குமதி வரியை 25 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதாக அறிவித்திருந்தார். சீனாவின் மோசமான வர்த்தக நடவடிக்கையால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.