அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த பெற்றோர் - 55 நாட்களுக்குப் பிறகு குழந்தைகளுடன் சேர்ப்பு

சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் முகாம்களில் தனித்தனியாக அடைத்து வைக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

Update: 2018-07-12 11:25 GMT
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க, அந்நாட்டு அரசு குடியேற்ற சட்டத்தில் கடுமையான விதிகளைக் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து, சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் முகாம்களில் தனித்தனியாக அடைத்து வைக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, சட்டவிரோதமாக  குடியேறியதாகக் கூறி பிரித்து வைக்கப்பட்ட ஹோண்டுராஸ், கவுதமாலா நாடுகளை சேர்ந்த, பெற்றோரை, 55 நாட்களுக்கு பிறகு, அவர்களது குழந்தைகளுடன், அறக்கட்டளை அமைப்பு ஒன்று சேர்த்து வைத்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்