காரில் ஏறும் வாடிக்கையாளர்கள் பாடல்களை பாடினால் தான் கார் இயங்கும்
வித்தியாசமான அனுபவத்தை பெற, இளைஞர்கள் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்
பின்லாந்தின் Turku நகரில் ஒரு திருவிழாவை ஒட்டி , வாடகை கார் நிறுவனம் ஒன்று வித்தியாசமான ஏற்பாட்டை செய்துள்ளது... காரில் ஏறும் வாடிக்கையாளர்கள் பாடல்களை பாடினால் தான் , கார் இயங்கும்.. பாடுவதை நிறுத்தினால் கார் என்ஜின் நின்றுவிடும்... இந்த கார்கள் பேட்டரியில் இயங்கக் கூடியதாகும்... இதற்காக வரிசையாக பல பாடல்களை பாட தயாராக வரும்படி கார் நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது.. இந்த வித்தியாசமான அனுபவத்தை பெற, இளைஞர்கள் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்... சுற்றுச்சூழலை காக்க , பேட்டரி கார்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக கார்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.