உலக அளவில் கோடிக்கோடியாக பணம் புரளும் தொழில் - குதிரைப்பந்தய சூதாட்டம்

உலக அளவில் வருடத்திற்கு சராசரியாக குதிரைப்பந்தய சூதாட்டத்தில் 7 லட்சம் கோடி புரளுவதாக கூறப்படுகிறது

Update: 2018-07-10 10:25 GMT
உலகளாவிய அளவில் குதிரைப்பந்தயங்கள் நடத்தப்பட்டாலும் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக விதிமுறைகள் இருப்பதில்லை... சில நாடுகளில் விதிமுறைகள் வேறுபடுகின்றன..  Flat racing, Jump racing, Harness racing என பல விதங்களில் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் குதிரைப்பந்தயத்தில் சூதாட்டம்   என்பது  பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் இருக்கும் எழுதப்படாத விதி. வெகுசில நாடுகளில் வெகுசில நேரங்களில் மட்டுமே   சூதாட்டம் நடப்பதில்லை... உலக அளவில்  வருடத்திற்கு சராசரியாக குதிரைப்பந்தய சூதாட்டத்தில் 7 லட்சம் கோடி புரளுவதாக கூறப்படுகிறது. இந்தியாவை பொருத்தவரை 200 ஆண்டுகால வரலாறை தாங்கி நிற்கிறது குதிரைப்பந்தயம். பாகிஸ்தானிலும் எவ்வித தங்கு தடையும் இன்றி குதிரைப்பந்தயங்கள் நடந்து வருகிறது. சீனாவில் 1949 முதல் குதிரைப்பந்தயங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சமீப காலமாக அந்த தடைகள் அவ்வப்போது தளர்த்தப்பட்டு குதிரைப்பந்தயங்கள் அனுமதிக்கப்படுகின்றன. துபாயில் உள்ள The Meydan Racecourse  தான் உலகின் மிகப்பெரிய  குதிரைப்பந்தய மைதானம்.ரேசில் பங்கேற்கும் குதிரைகள் அதிக அளவில் காயத்திற்கு ஆளாவதாக புகார் எழுகிறது..  குதிரைகளுக்கு ஊக்க மருந்து செலுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது.அதே போல ஆண்டுக்கு சராசரியாக 1000 குதிரை வீரர்களில் 600 பேருக்கு காயம் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கிறது..  
Tags:    

மேலும் செய்திகள்