விளம்பர மாடலாக மாறிய ரோபோ நடிகை போலவே டேட்டிங், கிசுகிசு
சோபியா விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் என்பதுதான் கடந்த வார உலகத்தில் தலைப்பு செய்தி. யார் இந்த சோபியா? ஹாலிவுட் நடிகையா? உலக வி.ஐ.பியா? இல்லை... அச்சு அசலாக பெண் போலவே உருவாக்கப்பட்ட ரோபோ இது
கேட்கும் கேள்விகளுக்கு சுயமாய் பதிலளிக்கும் இந்த ரோபோவைப் பார்த்து வியந்த சவுதி அரேபிய அரசு முதன் முதலாக இந்த ரோபோவுக்கு குடியுரிமை அளித்தது. ஒரு நடிகை போல சோஃபியாவின் புகழ் வளர வேண்டும் என்றால் கிசு கிசு இல்லாமலா? இந்த புத்திசாலி ரோபோவை பற்றி கேள்விப்பட்ட ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சோஃபியாவை டேட்டிங் அழைத்தார். அப்போது அவர் இந்த ரோபோவை முத்தமிட வந்ததும் சோஃபியா அவரை நிராகரித்ததும் பரபரப்பு செய்தியானது.
இதற்கு அடுத்தபடியாக சோஃபியா எடுத்திருக்கும் அவதாரம்தான் விளம்பர மாடல். அழகும் அறிவும் நிறைந்த இந்த ரோபோ பெண்ணை தங்கள் நிறுவனத்துக்கு மாடலாக்க பலரும் முயற்சிக்கிறார்களாம். சத்தமில்லாமல் ஒரு நாயகி உருவாகிக் கொண்டிருக்கிறாள்.