இலங்கை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
இலங்கை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 76 பேர் மட்டுமே தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். ரனிலுக்கு ஆதரவாகவும் தீர்மானத்துக்கு எதிராகவும் 122 பேர் வாக்களித்தனர். இதனால், பிரதமர் ரனில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. வாக்கெடுப்பில் 26 பேர் கலந்து கொள்ளவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.