சென்னை அண்ணா நகரில் உள்ள ஹோட்டல் உணவு குறித்து ரிவ்யூ செய்த வீடியோவை, பெண் யூடியூபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் அவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வதுபோன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சமூக ஆர்வலர் ஒருவர் அந்த வீடியோவை பகிர்ந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக பதிவிட்டிருந்தார். இதையடுத்து ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்ற அந்த பெண்ணுக்கு சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் யூடியூபர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைத்தளம் மூலம் பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் யூடியூபர்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது அவசியம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.