திருமணமான 4 நாட்களில் பெண் மர்ம மரணம்... பெற்றோருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-01-10 13:59 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற இளம்பெண், மாற்று சமூகத்தை சேர்ந்த நவீன் என்ற இளைஞரை காதலித்து, வீட்டிற்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரம் அறிந்து பெண்ணின் பெற்றோர் ஐஸ்வர்யாவை வீட்டில் அடைத்து வைத்த நிலையில், கடந்த 3ம் தேதி, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், ஐஸ்வர்யாவின் உடலை பெற்றோர் மயானத்தில் வைத்து எரித்தனர். இதுதொடர்பாக ஐஸ்வர்யாவின் கணவர் நவீன் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் மற்றும் தாய் ரோஜா ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். 15 மணி நேர விசாரணையின் அடிப்படையில், ஐஸ்வர்யாவை கடுமையாக தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்