தவறான சிகிச்சையில் சிக்கிய பெண்.. "தாங்கிக்கொள்ள முடியாத வலி.." - பூகம்பத்தை கிளப்பிய புகார்

Update: 2023-11-07 08:34 GMT

கோபி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் இயற்கை உபாதை கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கீழ்வானியைச் சேர்ந்த பெருமாள் மனைவி ரம்யாவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரசவத்துக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுகப்பிரசவம் ஆன நிலையில், இயற்கை உபாதை கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது உரிய பதிலளிக்காத நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் ரம்யா சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் இரண்டு சிகிச்சை செய்ய வேண்டும் மருத்துவர்கள் அறிவுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரம்யா புகார் மனு அளித்துள்ளார். அதில், தனக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, மேல்சிகிச்சை செய்ய உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்