கடலின் காற்றின் வேகம் 65 கிலோ மீட்டர் வரை இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களுடைய படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.