உடலுறவுக்கு மறுத்த மனைவியுடன் தகராறு..தாயை தாக்கியதால் தந்தையை கொன்ற மகன்..

Update: 2023-08-18 08:13 GMT

திருப்பத்தூர் அருகே தாயிடம் தகராறு செய்த தந்தையை, மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் சு. பள்ளிப்பட்டு ஊராட்சி கீழ் குரும்பர் தெருவை சேர்ந்த ஜெயபால் பெங்களூரில் கொத்தனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், உமேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ஜெயபால் பெங்களூரில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். வந்தவுடன் மனைவியை உடலுறவிற்கு அழைத்தபோது அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு முற்றியதில் ஜெயபால் மனைவியை அடித்துள்ளார். இதைப்பார்த்த அவரது மகன் உமேஷ் தனது தந்தையை தலையின் பின்பக்கம் அடித்ததில் மயங்கி கீழே விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கந்திலி போலீசார் உமேஷ் மற்றும் சிவகாமியை கைது செய்தனர். இச்சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்