திருப்பத்தூர் மாவட்டம் நிம்மியம்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பணிதள பொறுப்பாளர் விவகாரத்தில் ஞானம் மற்றும் சுதாகர் என்பரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதில், இருவரும் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைகலப்பால் ஏற்பட்ட பரபரப்பான சூழலிலும் அங்கிருந்த ஒருவர் மக்கா சோளம் கதிரை விடாமல் சாப்பிட்டு கொண்டிருந்தது வியப்பை ஏற்படுத்தியது.