சென்னையில் விருந்துக்கு அழைத்து 50 லட்சம் ரூபாய் பணம் பறித்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஜாவித் சைபுதீன் என்பவருக்கு வாட்ஸ்அப் மூலம் அறிமுகமான பெண் ஒருவர் தனது உறவினர் வீட்டில் நடைபெறும் நிகழ்சிக்கு பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து விருந்துக்கு சென்ற ஜாவித் சைபுதீனிடம் இருந்து 50 லட்சம் ரூபாபாயை தனது நண்பர்களுடன் சேர்ந்து இளம்பெண் மிரட்டி வாங்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வேலூரை சேர்ந்த சோனியா என்பவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர் அளித்த தகவலின் பேரில் தமீம் அன்சாரி, சீனிவாசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்