வங்கக்கடலில் உருவாகும் புயல்.. என்ன செய்ய காத்திருக்கிறது? டெல்லியில் அவசர ஆலோசனை

Update: 2024-05-25 02:52 GMT

வங்க‌க் கடலில் உருவாகும் புயல், மேற்கு வங்கத்தில் கரையை கடக்க உள்ளதால், தயார் நிலை குறித்து தேசிய நெருக்கடி நிர்வாகக் குழு டெல்லியில் ஆலோசனை நடத்தியது.

அப்போது, மத்திய கிழக்கு வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை குறித்து, இந்திய ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் விவரித்தார். மேற்கு வங்க மாநிலத்தில், புயலை எதிர்கொள்வதற்காக, மாவட்ட கட்டுப்பாட்டு அறைகள், தங்குமிடங்கள், மின் விநியோகம், மருந்து பொருட்கள், அவசரகால சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, மீனவர்கள் கரை திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்றார். பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளிலிருந்து மக்களை முன்கூட்டியே அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் குறித்து ஆய்வு செய்யுமாறு மேற்கு வங்க அரசை கேட்டுக் கொண்ட அவர், மத்திய முகமைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், உதவிக்கு உடனடியாக வந்து சேரும் என்றும் உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்