ஒரு பிடி மண்ணைக் கூட கொடுக்க மாட்டோம - 397ஆவது நாளாக... விடிய விடிய.. மக்கள் தொடர் போராட்டம்
"ஒரு பிடி மண்ணைக் கூட கொடுக்க மாட்டோம்" 397ஆவது நாளாக... விடிய விடிய.. மக்கள் தொடர் போராட்டம்
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 397ஆவது நாளாக, ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், 13 கிராமங்களை உள்ளடக்கி பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 397ஆவது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விமான நிலையம் அமைக்க மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும், ஒரு பிடி மண்ணைக் கூட கொடுக்க மாட்டோம் என கூறிய கிராம மக்கள், மத்திய மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷம் எழுப்பினர்.