உள்ளங்கையில் எடுத்து வந்த உடல்...மனித பிண்டத்தின் மிச்சம் இதுதானா? ஈரக்குலையை அறுக்கும் காட்சி

Update: 2024-08-20 08:39 GMT

உள்ளங்கையில் எடுத்து வந்த உடல்

மனித பிண்டத்தின் மிச்சம் இதுதானா?

ஈரக்குலையை அறுக்கும் `கண்’ கண்ட காட்சி

வயநாடு நிலச்சரிவில் அயராது உழைத்து பல உயிர்களை காத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாராட்டு விழா நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் குறித்த செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு..

யாரும் எதிர்பாராத கோரத்தை அரங்கேற்றி நாட்டையே உலுக்கியது வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும்...

இதில் இருந்து வயநாடு மெல்ல மெல்ல மீண்டு கொண்டிருக்க, அதற்கு உறுதுணையாக இருந்து பல உயிர்களை காப்பற்றினர் மீட்பு படையினர்..

இரவு பகல் பாராமல், மண்ணுள் புதைந்தவர்களை மீட்பது, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்பது, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பது, என தொடர் மீட்பு பணிகள் மட்டுமே அரங்கேறி வந்தன.

இதற்காக தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் பலர் மீட்பு பணிக்காக அங்கு சென்று பலர் பணியாற்றினார்.

அப்படி மீட்பு பணியில் ஈடுபட்டு சொந்த ஊர் திரும்பியவர்களை கௌரவிக்கும் வகையில் நீலகிரியில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுநர் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீட்பு பணி அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

சாதாரணமாக விபத்துகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள், வயநாட்டில் கை, கால்கள் தனியாக மீட்டதன் திகில் அனுபவத்தையும் பகிர்ந்தனர்..

இதில் கொடூரம் என்னவென்றால், டிபன் பாக்ஸில் உடல் பாகங்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்ததாக வேதனை தெரிவித்தது தான்..

இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என கூறும் ஓட்டுநர்கள், மனதை ரணமாக்கிய சம்பவம் இது என வேதனை தெரிவித்ததோடு, பல உயிர்களை காப்பாற்றியது மட்டுமே ஒரே ஆறுதல் என கனத்த இதயத்துடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்