துயரத்தில் இருக்கும் வயநாடு மக்களின் வயிற்றில் அடித்த பேங்க்.. கொந்தளித்த பினராயி விஜயன்
கேரள மாநிலம் வயநாட்டில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் பினராயி விஜயபன், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் கேரளா கிராமிய வங்கி சூரல்மலையில் மாதாந்திர தவணைத் தொகையை வசூலித்தது சரியல்ல என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.