தாய், தந்தையுடன் சேர்த்து 1 வயது குழந்தை உயிரை எடுத்த பேரழிவு

Update: 2024-07-31 12:29 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த கௌசல்யா என்பவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து, கேரளாவுன் சூரல்மலை பகுதியில் வசித்துள்ளார். கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து விரைந்த உறவினர்கள், மூவரின் உடல்களை அடையாளம் கண்டு அங்கேயே எரியூட்டிவிட்டு திரும்பியதாக சோகத்துடன் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்