குடிநீர் வழங்குவதில் தகராறு - 2 பேருக்கு அரிவாள் வெட்டு.. பின்னணியில் ஊ.ம. தலைவரின் மருமகன்?

Update: 2024-04-23 03:25 GMT

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில் வெங்கடேசன், அவருடைய நண்பர் ஜெயக்குமார் ஆகியோருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கோட்டீஸ்வரி அன்புவின் மருமகன் மணிகண்டனுக்கும் டிராக்டரில் வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வெங்கடேசனின் அலுவலகத்துக்குச் சென்ற மணிகண்டனின் நண்பர்கள் அங்கு, வெங்கடேசன், ஜெயக்குமார் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் காயம் அடைந்த இருவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, 3 பேரை பூந்தமல்லி போலீசார் கைது செய்த நிலையில், மணிகண்டனை கைது செய்ய வலியுறுத்தி வெங்கடேசனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்