சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் - ஆர்ப்பரித்து கொட்டும் கவியருவி...கோவை போனா மிஸ் பண்ணிராதீங்க!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கவியருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், கவியருவியில் தண்ணீர் விழுகிறது. இந்நிலையில், வார முறையையொட்டி உள்ளூர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அருவிக்கு வருகை தந்திருந்தனர். மேலும், கவியருவியில் கொட்டும் தண்ணீரில் உற்சாக குளியல் போட்டு மகிந்தனர்.