புதிய வாக்காளர்களுக்கு இரண்டு மாத காலத்துக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, வாக்காளர் பட்டியலில் இதுவரை, 4 லட்சத்து 32 ஆயிரத்து 805 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.