ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரம் கிராமத்தில் அனைத்து சமூகத்தினரும் வசித்து வரும் நிலையில், இரு நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவின்போது, இரு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில், பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்து விட்டதால், அவருடைய உடலை சிறுபான்மையாக உள்ளவர்கள் வசிக்கும் பகுதியாக வழியாக கொண்டு சென்றபோது, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த பெரும்பான்மை சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, சிறுபான்மையாக வசிக்கும் சமூகத்தினர் ஒப்புக் கொண்டனர். இருப்பினும், எழுத்துப்பூர்வமாக கேட்டு பெரும்பான்மை சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போலீசார் அவர்களை விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.