முகம் சிதைத்து கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த சடலம்.. விருதுநகரையே நடுங்கவிட்ட பயங்கரம்

Update: 2024-06-16 09:24 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, கறிக்கடைக்காரர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணமநாயக்கர் பட்டியை சேர்ந்தவர் பிரசாந்த். தன் மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர், கிருஷ்ணன் கோயில் பகுதியில் கறிக்கடை வைத்து தொழில் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், தன் கடைக்கு அருகே உடலில் வெட்டுக் காயங்களுடன் பிரசாந்த் சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பிரசாந்த்தின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றான்ர்.

Tags:    

மேலும் செய்திகள்