அன்று அப்பா செய்த தவறு..! இன்று மகனை பழிவாங்கிய கயிறு.. விருதுநகரில் உச்சகட்ட பரபரப்பு

Update: 2024-02-26 11:18 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், சில தினங்களுக்கு முன்பு பாஜக நிர்வாகியான பிரித்திவிராஜ் என்பவரது வீட்டில், 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது. இந்த திருட்டு சம்பவத்தில், சிசிடிவி காட்சிகளை வைத்து, குறிஞ்சான் குளத்தை சேர்ந்த மாணிக்கம் என்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தந்தையின் செயலால் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மகன் கர்ணன் என்பவர், அவமானம் தாங்க முடியாமல் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது, உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்