வெளியே ஒன்றுமே தெரியாது கால் வைத்தால் விழுங்கும் பாதாள அரக்கன் - கை குழந்தையோடு உள்ளே சென்ற பெண்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நெடுஞ்சாலைத் துறையால் தோண்டப்பட்ட பள்ளத்தில் கைக் குழந்தையுடன் ஒரு பெண்ணும், மற்றும் ஒரு முதியவரும் விழுந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன... இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
மழை வெள்ளத்துக்குள் ஒளிந்தபடி வாய் பிளந்து காத்திருக்கிறான் இந்த பள்ளம் எனும் அரக்கன்...
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த சில மாதங்களாகவே...நெடுஞ்சாலைத் துறையால் வாறுகால் அமைத்தல், சாலையை அகலப்படுத்துதல், போன்ற பல்வேறு பணிகளுக்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டுள்ளன...
கடந்த சில நாள்களாக சாத்தூர் நகர் பகுதியில் மாலை நேரங்களில் மழை பெய்து வரும் நிலையில்...சாலையோர பள்ளங்களில் மழை வெள்ளம் தேங்கி அடைத்துக் கொள்கின்றன...
சாதாரணமாக பார்த்தால் மழை வெள்ளத்துக்கு அடியில் பள்ளம் இருப்பது தெரிய வாய்ப்பே இல்லை...
எச்சரிக்கை பலகை உண்டா என்றால் அதுவும் இல்லை...
இந்த சூழலில் சாத்தூர் மதுரை பேருந்து நிறுத்தம் அருகே 3 பெண்கள் கைக்குழந்தையுடன் சாலையை கடக்க முயன்றனர்...
அப்போது சாலையை அகலப்படுத்தும் பணிகளுக்காக தோண்டி வைக்கப்பட்ட பள்ளத்தில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்தார் பெண் ஒருவர்...
பதறிப்போன அக்கம்பக்கத்தினர் இருவரையும் உடனடியாக மீட்டனர்... இதனால் அந்தப் பகுதியே பரபரப்பானது...
பள்ளம் இருப்பது தெரியாமல் அசால்ட்டாக நடந்து வந்த முதியவர் கால் தவறி பள்ளத்திற்குள் விழவே...பார்த்து வரக்கூடாதா என வருவோர் போவோர் எல்லாம் அறிவுரை கூறிச் சென்றனர்...
விபத்துகளை தவிர்க்க...மழைக் காலங்களில் சாலைகளை அகலப்படுத்தும் பணிக்காக பள்ளங்கள் தோண்டப்படும்போது எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்...