வைராக்கியமாக வாழ்ந்த சிறுவன் வாழ்வையே புரட்டிய ஒற்றை வீடியோ கலெக்டரே கண் கலங்கிய பரிதாபம்
வைராக்கியமாக வாழ்ந்த சிறுவன் வாழ்வையே புரட்டிய ஒற்றை வீடியோ - கலெக்டரே கண் கலங்கிய பரிதாபம்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே குடும்ப கஷ்டத்திற்காக டீ விற்பனை செய்து கொண்டே படித்து வந்த சிறுவனின் துயர் துடைக்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த சையத் பாஷா-வாஹிரா தம்பதியின் மகன் அப்சர்...
இதில் தந்தை சையத் பாஷா மாற்றுத்திறனாளி என்பதால், அவரை பராமரிப்பது மட்டுமே தாயார் வாஹிராவின் முழு நேர பணி..
போதிய வருவாய் இல்லாததால், வறுமையின் பிடியில் குடும்பம் இருக்க, இரு பிள்ளைகளும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்..
வீட்டிற்கு வாடகை, மளிகை, தந்தையின் மருத்துவ செலவு என மாதத்திற்கு செலவுகள் அடுக்கடுக்காக இருக்கும் சூழலில், சையத் பாஷாவிற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கிடைக்கப்பெறும் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை மட்டுமே குடும்ப வருவாயாக இருந்துள்ளது..
இதனால் 15 வயதிலேயே குடும்ப பாரத்தை சுமக்கும் நிலைக்கு ஆளான அப்சர், அதிகாலை 4 மணிக்கு எழுந்து தேநீர் தயாரித்து ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு சென்று விற்பனை செய்து வருகிறார்..