"எப்படி காப்பாற்ற போறேன்னு தெரியல.."- பட்டாசு ஆலை பெண் தொழிலாளி கண்ணீர்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை பகுதியில் ஏராளமான பட்டாசு ஆலை தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு சுற்றுச் சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும், பட்டாசு ஆலைகளில் சோதனை மேற்கொள்ளும் அதிகாரிகள் பாரபட்சமின்றி சோதனை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பட்டாசு ஆலைகளை தடையின்றி நிரந்தரமாக திறக்க வேண்டுமென பெண் தொழிலாளி ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.