ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரசின் விளையாட்டு துறை சார்பில் சத்தியமூர்த்தி பவனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற செல்வப் பெருந்தகை, பாஜகவிற்கு இந்த தேசம் முக்கியம் இல்லை, அவர்களின் சித்தாந்தம்தான் முக்கியம் எனவும் வினேஷ் போகத்தை தோற்கடிக்க பாஜக சதி செய்திருக்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.