திருப்பத்தூர் மாவட்டம் வெங்காயப்பள்ளி கிராமத்தில், இளைஞர்கள் சார்பில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, விநாயகர் சதுர்த்தி நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், விழா இறுதி நாளில் சிலையை கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அருகில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஊர்வலத்தில் கலந்து கொண்டு நடனமாடியதாக தெரிகிறது. இதில் இரு கிராமத்து இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தற்போது இந்த வீடியோ காட்சி வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகின்றது.