ஜாலியாக சிரித்து விளையாடிய போதே நொடியில் நின்ற மூச்சு... வாழ வேண்டிய பிள்ளைகளுக்கு நேர்ந்த கொடுமை

Update: 2024-06-23 07:06 GMT

ஜாலியாக சிரித்து விளையாடிய போதே நொடியில் நின்ற மூச்சு... வாழ வேண்டிய பிள்ளைகளுக்கு நேர்ந்த கொடுமை

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே, தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில், பம்ப் செட்டில் மின் கம்பி அறுந்து விழ, அங்கு குளித்து கொண்டிருந்த 2 சிறுவர்கள் துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணய்நல்லூர் அருகே உள்ள தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்த வினோத் - விஜயலட்சுமி தம்பதிக்கு 11 வயதில் சப்தகிரி என்ற மகனுள்ள நிலையில், இவர்களின் உறவினரான கலியபெருமாள், சூர்யா தம்பதிக்கு 8 வயதில் லோகேஷ் என்ற மகனும் உள்ளனர்.

இரு சிறுவர்களும் அவ்வப்போது விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதே போல் வார விடுமுறையையொட்டி, வெளியில் சென்ற இரு சிறுவர்களும், தடுத்தாட்கொண்டூர் வயல்வெளியில் உள்ள பம்ப்செட்டில் குளித்து கொண்டிருந்தனர்...

இருவரும் உற்சாக மிகுதியில் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை அடித்துக் கொண்டு விளையாடிக்கொண்டிருக்க..எமனாய் வந்தது மின் கம்பி....

சிறுவர்கள் இருவரும் குளித்து கொண்டிருந்த பம்ப்செட்டுக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பி, அறுந்த நிலையில் இருக்க, திடீரென முழுவதுமாக அறுந்து பம்ப்செட்டுக்குள் விழுந்து தண்ணீர் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது..

உடனடியாக பதறியடித்து வந்த அக்கம்பக்கத்தினர் சிறுவர்கள் மீட்க முயற்சிக்க...ஒன்றுமறியா பிள்ளைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்...

இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் தாசில்தார் ராஜ்குமார், விழுப்புரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ், விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றக்கோரி ஏற்கனவே கோரிக்கை வைத்தும் மின்வாரியத் துறையின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்...

அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதங்கப்படும் மக்கள்..இனியும் இது போன்ற சோகங்கள் அரங்கேறாத வண்ணம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்