கடனை திருப்பி கேட்ட நபரை கொடூரமாக அடித்து கொன்ற தந்தை, மகன்.. விழுப்புரத்தில் பரபரப்பு சம்பவம்

Update: 2024-06-04 02:06 GMT

விழுப்புரம் மாவட்டம், ஆயந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர், அதே பகுதியை சேர்ந்த அருள் என்கிற முருகன் என்பவரிடம் 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதில், 20 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்து விட்ட நிலையில், மீதமுள்ள 5 ஆயிரத்தை கேட்டு சேகரிடம் அருள் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த சேகரின் சகோதரரான ஆட்டோ ஓட்டுனர் விஜயகுமார் அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். வாக்குவாதம் முற்றியதால், அருள் மற்றும் அவருடைய மகன்கள் ஆகாஷ், சண்முகம் ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் விஜயகுமார் மயக்கம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் விஜயகுமாரை மீட்டு முகையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், தொடர்பாக அருள் மற்றும் அவருடைய 2 மகன்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்