விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்று பொங்கல் வைக்கும் விநோத திருவிழா நடைபெற்றது. நைனார் மண்டபம் பகுதியில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டும் பொங்கல் வைப்பது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு அய்யனார் கோயிலில் கூடிய அப்பகுதி ஆண்கள், குளக்கரையில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். மூதாதையர்களின் வழக்கப்படி இவ்வாறு பொங்கலிட்டால் விவசாயம் செழிக்கும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.