திமுக VS பாமக VS நாதக - விக்கிரவாண்டி மக்களின் கருத்து | vikravandi by election

Update: 2024-07-10 08:07 GMT

திமுக VS பாமக VS நாதக - விக்கிரவாண்டி மக்களின் கருத்து

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி காலமானதை அடுத்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்ளிட்ட 11 வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்கள் 18 பேரும் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 29 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீசாருடன் மத்திய துணை ராணுவப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 110 இடங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விக்கிரவாண்டி தாலுகா அலுவலகங்களில் இருந்து தேர்தல் நிகழ்வுகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்