திமுகவுடன் கொள்கை `சமரசம்’ செய்த விஜய்.. இந்த ட்விஸ்ட்ட யாருமே எதிர்பார்க்கலயே

Update: 2024-10-28 07:29 GMT

திமுகவுடன் கொள்கை `சமரசம்’ செய்த விஜய்.. இந்த ட்விஸ்ட்ட யாருமே எதிர்பார்க்கலயே

திமுகவை தோற்றுவித்தபோது, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சமரசக் கொள்கையை வெளிப்படுத்தினார் அண்ணா... அவரது வழியில் திமுக பின்பற்றி செல்ல... அண்ணாவின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பின்பற்றுவோம் என சொல்லியிருக்கிறார் விஜய்

திமுக ஒருபோதும் மத நம்பிக்கை, பக்திக்கு எதிராக நிற்காது என்பதே திமுக தலைவர்கள் பேச்சு... பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்று கொள்ளவில்லை என்கிறது தவெக...

மதச்சார்பின்மை, சமூக நீதிக் கொள்கையை உயிர் மூச்சாக கொண்டு செயல்படுகிறது திமுக. மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையே எங்கள் கொள்கை என தவெகவும் அறிவித்துள்ளது.

ஆளுநர் பதவியே தேவையில்லை என்பது திமுகவினரின் நீண்ட கால பேச்சு. விஜய் பேச்சிலும் ஆளுநர் பதவி வேண்டாம் என்றார்.

திமுக தொடங்கியதிலிருந்து வலியுறுத்துவது மாநில சுயாட்சி, மாநிலத்தின் தன்னாட்சி உரிமைகளை மீட்போம் என்கிறார் விஜய் . தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையில் திமுக ஸ்திரமாக உள்ளது.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை பின்பறுவது கட்சியின் கொள்கை என தவெக அறிவித்துள்ளது.

நீட் தேர்வை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது... விஜயும் அனிதா மரணத்தை குறிப்பிட்டு நீட் தேர்வை எதிர்த்துள்ளார்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்படுவதாக திமுக சொல்கிறது. அதே எலோருக்கும் எல்லாம் என்பதை விஜயும் சொல்கிறார்.

கிட்டத்தட்ட திமுக கொள்கையோடு தவெக கொள்கையும் ஒத்திருக்க... திராவிட மாடல் ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என விமர்சனம் செய்திருக்கும் விஜய்... 2026 மாற்று அரசியல் என்ற சூளுரைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்