அப்பவே வேண்டாம் வேண்டாம் என கூறிய விஜய்... "இப்ப உயிரே போச்சே..". மகனை கண்டு கதறி துடிக்கும் தாய்
அப்பவே வேண்டாம் வேண்டாம் என கூறிய விஜய்... "இப்ப உயிரே போச்சே..". மகனை கண்டு கதறி துடிக்கும் தாய்
தவெக மாநாட்டிற்கு செல்ல வேண்டாம் எனக்கூறியும், பெற்றோரின் சொல் பேச்சு கேட்காமல் இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட இரு இளைஞர்களுக்கு நேர்ந்த சோகத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
மகனை பறிகொடுத்து கதறும் இந்த தாயின் குமுறலுக்கு ஆறுதல் கூற முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர் தவெக மாநாட்டிற்கு சென்ற இளைஞர்கள்....
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடக்கும் மாநாட்டிற்கு செல்ல தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடன் புறப்பட....அவர்கள் அதீத ஆர்வமே ஒரு உயிரை பறித்திருக்கிறது..
சென்னை கொத்தால்சாவடி மூக்கர் நல்லமுத்து பகுதியை சேர்ந்த 21 வயதான வசந்த் மற்றும் அவரது நண்பர் ரியாஸ் தவெக மாநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஆர்வமுடன் இருந்துள்ளனர்.
மாத சம்பளத்திற்கு வேலை பார்த்து வரும் இருவரும், இருசக்கர வாகனத்தில் மாநாட்டிற்காக காலையிலேயே புறப்பட்டுள்ளனர்.
இதில் வாகனத்தை ஓட்டி வந்த வசந்த் தலைகவசம் அணியவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், சரியாக டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிறுத்தம் அருகே சென்ற போது, மணல் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார் 21 வயதேயான வசந்த்...
மகனின் மரணச் செய்தி கேட்டு பதறிப்போன தாய், டிவியில் பார்த்துக் கொள்ளலாம், மாநாடுக்கு போக வேண்டாம் என கூறினேனே....எனக் கண்ணீர் விட்டு கதறிய காட்சிகள்...காண்போர் மனதை ரணமாக்கியது...
இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டாம் எனக்கூறியும் சொல் பேச்சு கேட்காமல் சென்றதாக தழுதழுக்கும் குரலில் கூறுகிறார் வசந்தின் தாயார்..
மேலும், வசந்துடன் இருந்த ரியாஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து தகவலறிந்ததும் கொடியை தூக்கி வீசி விட்டு மருத்துவமனைக்கு விரைந்ததாக தெரிவிக்கின்றனர் அவருடன் பயணித்தவர்கள்..
விபத்து குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே மாநாடுக்கு வரும் தொண்டர்கள், இருசக்கர வாகனத்தில் வருவதை தவிர்க்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் கூறிய நிலையில், சென்னையில் அரங்கேறியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.