தம்பியை ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்ட அண்ணன் - "இந்த பிரச்சனை தான் காரணம்"

Update: 2024-08-25 08:42 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, சொத்துப் பிரச்சனையால் தம்பி குத்திக்கொல்லப்பட்ட சம்பவத்தில் அண்ணனை போலீசார் கைது செய்தனர்.குடியாத்தம் அடுத்த கீழ்செட்டிகுப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன், அவரது தம்பி கவியரசன் ஆகிய இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வந்தனர். சொத்து பிரச்சனை காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாய்த்தகராறு முற்றி இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், காய்கறிகளை வெட்டும் கத்தியால், தம்பி கவியரசனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கவியரசனை அங்கிருந்தவர்கள் மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கவியரசனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்,

கார்த்திகேயனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்