திமுக முன்னாள் நிர்வாகியை தாக்கிய வன்னியர் சங்க நிர்வாகி கைது- வேலூரில் பரபரப்பு

Update: 2024-08-17 02:50 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் குடியாத்தம் குமரன். திமுகவில் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பதவி வகித்து வந்த இவர் , கடந்தாண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், யூடியூப் மற்றும் முகநூல் பக்கங்களில் திமுகவிற்கு ஆதரவாகவும், எதிர்கட்சி தலைவர்களை விமர்சித்தும் வீடியோ பதிவேற்றம் செய்து வந்தார். இந்நிலையில், சில நாள்களுக்கு முன் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி குறித்து குடியாத்தம் குமரன் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வன்னியர் சங்க நிர்வாகி மணிகண்டன் என்பவர் குடியாத்தம் குமரன் வீட்டிற்கு சென்று தகராறு செய்து அவரை தாக்கி இருக்கிறார். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், மணிகண்டன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, குடியாத்தம் குமரன் வீட்டிற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்