குடிநீர் தட்டுப்பாடு.. காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்.. | Thanthitv

Update: 2024-05-11 15:57 GMT

வேலூர் மற்றும் ஓசூரில் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது... இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது... இதனிடையே இன்று குடியாத்தம் - மாதனூர் சாலையில் உள்ளி பகுதியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்... இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர். ஆழ்துளை கிணறு மூலம் விநியோகிக்கப்படும் நீரும் போதிய அளவில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது... இந்நிலையில் இன்று குடிநீர் வேண்டி ரயில்வே நிலையம் அருகே மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்