பத்திரிகை அடித்து, அழைப்பு வைத்து பள்ளியிலேயே மாணவிக்கு வளைகாப்பு..

Update: 2024-09-21 06:47 GMT

பாடம் படிக்க வந்த இடத்தில், படம் எடுத்து இன்ஸ்டாவில் ரீல்ஸாக வெளியிட்டிருக்கின்றனர் இந்த அரசு பள்ளி மாணவிகள்...

அதுவும் சாதாரணமாக அல்ல.. வளைகாப்பு நடக்க இருப்பதாக கூறி முன்கூட்டியே இன்விடேஷன் அடித்து, தாங்கள் படிக்கும் பள்ளியில், இந்த தேதியில் நடக்க இருப்பதாக கூறி ஸ்டேட்டஸ் வைத்திருக்கின்றனர்...

அதில் ஆண் ஒருவரின் பெயரையும் குறிப்பிட்ட இவர்கள், மாணவி ஒருவரை கர்ப்பிணி போல் நடிக்க வைத்து, வளைகாப்பு பங்ஷனை ரீ கிரியேட் செய்ததுதான் தற்போது சர்ச்சையாக வெடித்திருக்கிறது...

மாணவிகளின் இன்ஸ்டா ஸ்டோரிக்கள் வைரலானதால் பூதாகரம்

இந்த சம்பவத்தை, தாங்கள் பயிலும் அரசு பள்ளிக்குள் வைத்து.. அதுவும் பள்ளி சீருடையில் இம்மாணவிகள் அரங்கேற்றியது, வேலூர் மாவட்ட கல்வித்துறையை ஆட்டம் காணச் செய்திருக்கிறது...

அனைவரும் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள்...

வகுப்பாசிரியர் சஸ்பெண்ட் - தலைமையாசிரியருக்கு நோட்டீஸ்

கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், மாணவிகளின் இன்ஸ்டா ஸ்டோரிக்கள் இணையத்தில் வைரலாக விவகாரம் பூதாகரமாகியிருக்கிறது...

இந்நிலையில்தான், நடவடிக்கையை கையிலெடுத்திருக்கிறது வேலூர் மாவட்ட கல்வித்துறை...

காட்பாடி அடுத்து செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட அரசு பள்ளியில், மாணவிகளின் வகுப்பாசிரியரான சாமுண்டீஸ்வரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி...

தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டிருக்கிறது...

பள்ளியில் மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த சம்பவம்.. 

Tags:    

மேலும் செய்திகள்