சற்று விலகி போன சித்தப்பா....நொடியில் சிறுமியின் மூச்சை பறித்த பாலாறு...

Update: 2024-08-11 06:57 GMT

வேலூர் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 3ம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே உள்ள கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன், ஷகிலா தம்பதி . இவர்களின் 2 வது மகள் திவ்யா தனியார் பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், தனது சித்தப்பா சசிக்குமார் மற்றும் சகோதரிகளுடன், அருகில் உள்ள பாலாற்றில் குளிக்க சென்றார் திவ்யா. அப்போது சசிக்குமார் அருகில் இல்லாத நேரத்தில், திவ்யா உட்பட 4 குழந்தைகளும் தண்ணீரில் குதித்து விளையாடிதாக தெரிகிறது. திடீரென ஆழம் அதிகமான பகுதிக்கு சென்ற நிலையில், நீச்சல் தெரியாமல் தத்தளித்துள்ளனர். உடனடியாக நான்கு பேரும் மீட்கப்பட்ட நிலையில், திவ்யா மட்டும் நீரில் மூச்சு திணறி உயரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்