வேலூர் காட்பாடி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கண்டிப்பேடு அருகே காரில் இருந்த கரும்புகை வந்ததை கண்ட ஓட்டுநர், உடனடியாக காரில் இருந்து இறங்கி உயிர்தப்பினார். சிறிது நேரத்தில் கார் தீக்கிரையான நிலையில், பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவே விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது.