வைகோ தொடர்ந்த வழக்கு மீண்டும் விசாரணை

Update: 2024-08-13 14:30 GMT

நியூட்ரினோ திட்டம் கைவிடப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ள மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த 2015-ல், தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மதிமுக தலைவர் வைகோ மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து, நியூட்ரினோ திட்டம் கைவிடப்பட்டதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி வழக்கை ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்