போதையில் மீன் வியாபாரி ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி
உளுந்தூர்பேட்டை அருகே சுங்கச்சாவடி அருகே குடிபோதையில் மீன் வியாபாரி ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, சம்பவத்திற்கு முன்னர், மீன் வியாபாரியை லாரி உரிமையாளர் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.
செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த மீன் வியாபாரி சக்திவேல், 2 நாட்களுக்கு முன்பு சுங்கச்சாவடிக்கு சென்றபோது மது போதையில் டீக்கடை ஒன்றில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தடுக்க வந்த பொதுமக்களை அவர் தாக்கியதாக கூறி, சக்திவேல் மற்றும் அவரது உறவினர் புருஷோத்தமன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில், திடீர் திருப்பமாக, டீக்கடைக்கு வந்த சக்திவேலை, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் சதீஷ் என்பவரும் அவரது நண்பரும் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இந்த காட்சிகளின் அடிப்படையில் சக்திவேலை தாக்கிய லாரி உரிமையாளர் சதீஷ் மற்றும் அவரது நண்பரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.