நூறு விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி முதல் கட்டமாக வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 525 கிராம பஞ்சாயத்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, 86 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், கும்பகோணத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பில் நவீன விளையாட்டு அரங்கம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.