தவெக மாநாட்டில் விஜய் பேச போவது என்ன? - மொத்தம் 45 நிமிசம். டாப் சீக்ரெட் கசிந்தது..!

Update: 2024-10-24 05:41 GMT

தவெக மாநாட்டில் விஜய் பேச போவது என்ன? - மொத்தம் 45 நிமிசம். டாப் சீக்ரெட் கசிந்தது..!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் இடம்பெறும் நிகழ்வுகள், விஜய் பேசவுள்ள கருத்துகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 27-ம் தேதி, விக்கிரவாண்டி வி சாலையில் தவெக மாநாடு நடைபெறவுள்ள நிலையில், 4 மணிக்கு மாநாடு தொடங்கும் எனவும், 5 மணிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மேடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்படுவதுடன், அவர்களில் 5 முதல் 8 பேருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கட்சியின் கொள்கைகள், விதிகளை அறிவிக்கும் விஜய், ஊழல், அரசியல், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் தலைவர்கள் குறித்த கருத்துகளை தெரிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 45 நிமிடம் விஜய் பேசவுள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகள் மீதான விமர்சனங்களையும் அவர் முன்வைப்பதுடன், தொண்டர்களுக்கு குட்டிக்கதை கூறுவார் என கூறப்படுகிறது. தொண்டர்களுக்கான உணவுகளை அந்ததந்த பொறுப்பு நிர்வாகிகளே வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்