தவெகவின் கொள்கைகள் - விஜய் அதிரடி அறிவிப்பு
தமிழே ஆட்சி மொழி என்றும் இரு மொழிக்கொள்கை பின்பற்றப்படும் எனவும் தமிழக வெற்றிக்கழக கொள்கையில் தெரிவிக்கப்பட்டது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் மக்கள் யாவரும் பிறப்பால் சமமே, பாரபட்சமற்ற சமநிலை சமூகம் படைப்பதே தவெகவின் கோட்பாடு என தெரிவிக்கப்பட்டது.
தனி மனித சமூக பொருளாதார அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தி எல்லோருக்கும் எல்லாமுமான சமநிலை சமூகம் உருவாக்கப்படும் என்றும்
அனைவருக்கும் சம உரிமைகளை உத்தரவாதப்படுத்தி சாத்தியப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தி மக்கள் உரிமைகளை பறிக்கும் மாநில ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து மக்களுக்கான ஜானநாயக உரிமைகள் நிலைநாட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சாதி முழுமையாக ஒழிக்கப்படும் வரை அனைத்து துறையினருக்கும் அனைத்து பிரிவுகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்குவதே தவெகவின் சமதர்ம சமூக நீதி என்றும்
அனைத்து மதத்தினரையும், மதநம்பிக்கை அற்றவரையும் சமமாக பாவிக்கும் அரசு நிர்வாகம் தான் நமக்குறிய மதச்சாற்ற கொள்கை எனவும் அறிவிக்கப்பட்டது.
மாநில தன்னாட்சி உரிமைகள் மீட்டெடுக்கப்படும் என்றும் இருமொழி கொள்கை பின்பற்றப்படும் எனவும் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
தமிழே ஆட்சி மொழி, தமிழே வழக்காடு மொழி தமிழே வழிபாட்டு மொழி என்றும் தமிழ்வழி கல்வியில் படிப்போருக்கு அரசு வேலையில் முன்னுரிமை எனவும் தெரிவிக்கப்பட்டது.
அரசியல் தலையீடற்ற அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் வகையில், அரசு மற்றும் தனியார்துறைகளில் லஞ்சம் லாவண்யம் அற்ற நிர்வாகம் வழங்கப்படும் என்றும்
கல்வி, சுகாதாரம், தூய காற்று, தூய குடிநீர் என எல்லோருக்குமான அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும் என்வும் தவெக கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் என்றும் போதை அறவே இல்லாத தமிழகம் படைக்கப்படும் எனவும் தவெக மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.