2026-ல் களமிறங்கும் தொகுதி... மாநாட்டில் விஜய் கொடுத்த க்ளு - எந்த ஒரு கட்சியும் அறிவிக்காத முடிவு

Update: 2024-10-28 06:57 GMT

2026-ல் களமிறங்கும் தொகுதி... மாநாட்டில் விஜய் கொடுத்த க்ளு - எந்த ஒரு கட்சியும் அறிவிக்காத முடிவு

மதுரையில் தலைமைச் செயலக கிளை என்று தவெக அறிவிப்பை அடுத்து, விஜய் மதுரையில் களமிறங்குகிறாரா? என்ற பேச்சு வலுப்பெற்றிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

லட்சக்கணக்கான தொண்டர்களால் குலுங்கியிருக்கிறது விக்கிரவாண்டி... இதெல்லாம் மதுரை குலுங்கியது என்றுதான் சொல்லியிருக்கனும்...

ஆமாம்..

மதுரை என்றாலே விஜய்க்கு தனிக்காதல்.. மதுரையை மைய களமாக வைத்து எடுக்கப்பட்ட கில்லி... விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படம்...

அரசியல் கட்சியை அறிவித்த கையோடு மாநாட்டு இடம் தேடிய விஜயின் முதல் தேர்வு மதுரையே.

விஜய் உத்தரவில் த.வெ.க,. சீனியர்கள் மதுரையில் இடம் தேடவும் தொடங்கினர். ஏதோ காரணங்களால் கிடைக்காமல் போக... பிறகு திருச்சி நோக்கி வந்தவர்களுக்கு, அதைத்தாண்டி விக்கிரவாண்டி கிளிக் ஆகியிருக்கிறது.

இந்த மாநாட்டில் மதுரையில் துணை தலைமை செயலகம் அமைக்கப்படும் என தவெக அறிவித்துள்ளது.

தென் மாவட்டங்கள் வளம்பெற மதுரையை கேந்திர நகரமாக்க வேண்டும்... நிர்வாக நகரமாகவும் ஆக்க வேண்டும் என்ற கோரிக்க நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கிறது. இப்போது தவெக அறிவிப்பு மீண்டும் மதுரையை லைம் லைட்டில் கொண்டு வந்துள்ளது.

ஆம்.. விஜய் மதுரையில் போட்டி என்ற பேச்சுதான்... 2026-ல் தவெக ஆட்சிதான் என விஜய் சூளுரைப்பதற்கு முன்பாகவே... மதுரையில் விஜய் போட்டி என்ற போஸ்டர்கள் அங்கு சற்று அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்துவிட்டது.

விஜய், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், தூத்துக்குடி, சென்னை ஆர்.கே. நகர் இவற்றில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடுவார் என்ற தகவல்கள் வெளியாகின.

அப்போது மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் விஜய் போட்டியிட இருப்பதாக, கட்சியினர் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன... போஸ்டர் தென் மாவட்ட தவெக நிர்வாகிகளை உற்சாகமாக்கியது.

இப்போது மதுரையில் துணை தலைமை செயலகம் என்ற தவெக அறிவிப்பு... விஜய் தொகுதி குறித்த பேச்சையும் சூடாக்கியிருக்கிறது. சினிமாவில் விஜய்-க்கு பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்த மதுரை மண்ணில்... விஜய் தேர்தல் அரசியலை தொடங்குகிறாரா? என்பதை பொறுத்திருந்து காணலாம்... 

Tags:    

மேலும் செய்திகள்