இளைய சமுதாயத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பது எப்போது? என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ராமநாதபுரம் மூலமாக இலங்கைக்கு கடத்தவிருந்த 6 கிலோ எடை கொண்ட 70 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பட்டமைன் எனும் கொடிய வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதை குறிப்பிட்டு அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.