Door-ஐ திறந்ததும் டிடிஎஃப் வாசானுக்கு காத்திருந்த அதிர்ச்சி... கையோடு கொத்தாக தூக்கினர்!
Door-ஐ திறந்ததும் டிடிஎஃப் வாசானுக்கு காத்திருந்த அதிர்ச்சி... கையோடு கொத்தாக தூக்கினர்!
கன்னியாகுமரியில் தனியார் உணவகத்தின் முன்பு பிரபல யூ டியூபர் டி.டி.எப். வாசனைக் காண இளைஞர்கள் கூட்டம் குவிந்ததால் பரபரப்பு நிலவியது... இரவில் சர்ச் ரோடு பகுதியில் உள்ள தனியார் உணவகத்திற்கு டிடிஎஃப் வாசன் உணவருந்த சென்றுள்ளார். அவரது வருகையை அறிந்து கொண்ட பல இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்... உணவகம் முன்பு ஏராளமான மாணவர்களும், இளைஞர்களும் கூடியதால் போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டது. உணவகத்தில் இருந்து வெளியில் வந்த டி.டி.எஃப் வாசனை இளைஞர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்றனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பைக்குகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தி டிடிஎஃப் வாசனை பத்திரமாக அனுப்பி வைத்தனர்